அநுரகுமாரவிற்கு திருடர்களை பிடிக்கும் அமைச்சு
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
By Sumithiran
அநுரகுமார திஸாநாயக்க திருடர்களை பிடிப்பதாக தொடர்ச்சியாக கூறி வருவதாகவும், அதற்கமைவாக திருடர்களை பிடிக்கும் அமைச்சை பூரண அதிகாரத்துடன் அவருக்கு வழங்குமாறு அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அநுரகுமாரவுக்கு சட்ட ஒழுங்குகளை அனுப்பி அவற்றை தயார் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
"திருடர்களைப் பிடிக்கும் அமைச்சை எடுத்துக்கொண்டு ஒரு திருடனைப் பிடித்து நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வாருங்கள். அவ்வாறு இல்லாது திருடர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றாக சேர்க்காதீர்கள்" என அவர் தெரிவித்தார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி