யாழ் மண்ணில் வரலாற்றின் முதல் தடவையாக சர்வதேச அழகிப் போட்டி
சர்வதேச அழகிப் போட்டியான Miss Globe 2023 ஐ நடத்துவதற்கான வாய்ப்பை இம்முறை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி இந்த நிகழ்ச்சிக்கான ஊடக அனுசரணையை வழங்குகின்றது.
இந்த நிலையில் 75ற்கு மேற்பட்ட நாடுகளின் அழகிகளின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எமது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக அமைகிறது.
இலங்கை வரலாற்றில் இப்படியான ஒரு சர்வதேச நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறுவதுடன் அதனை சுற்றுலாத்துறை அமைச்சுடன் Tronic Entertainment நிறுவனம் சேர்ந்து ஏற்பாடு செய்கின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வாக Miss Globe 2023 இலங்கை அழகிப் போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பும் அங்குரார்பண நிகழ்வும் கொழும்பு ஹில்டன் விடுதியில் 11.03.2023 அன்று இடம்பெற்றதுடன் முதற்கட்ட அழகிப் போட்டி தெரிவும் அன்றே வெற்றிகரமாக நடைபெற்றது.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இப்போட்டியின் இரண்டாம் கட்ட தெரிவுகள் எதிர்வரும் 18.03.2023 அன்று காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஜெட்விங் விடுதியில் இடம்பெறவுள்ளது.
யாழ் மண்ணில் முதன்முறையாக இடம்பெறும் இப்போட்டியானது தமது திறமைகளை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் கால் பதிக்க காத்திருக்கும் வட மாகாண யுவதிகளுக்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
18-30 வயதிற்கிடைப்பட்ட அழகியல் துறையில் சாதிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கான ஒரு சிறந்த சர்வதேச களத்தை Tronic Entertainment யாழ்ப்பாணத்திற்கு அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்விற்கான மேலதிக தொடர்புகளுக்கு 0773030301 என்ற இலக்கத்தின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.
