காணாமற்போன பல்கலை மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு
அழுகிய நிலையில் மீடடகப்பட்ட சடலம்
காணாமற் போன பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனே ஆற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த மாணவன் காணாமல் போயிருந்தததாக தெரிவிக்கப்படுகிறது.

செயலிழந்த கைபேசி
மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அதில் அவரைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவரது சடலம் மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில், மாணவனின் பெற்றோர் பேராதனை காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ஆற்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.