யாழில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் - யாழ். வைத்தியசாலை மருத்துவர் குழாம் ஏற்பாடு!
Jaffna
Jaffna Teaching Hospital
By Pakirathan
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ குழாமினரால் தீவகப் பிரதேசங்களில் நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இதில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கண்புரை சத்திர சிகிச்சை
இந்த மருத்துவ முகாமில் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களை இனங்காணும் பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளது.
எனவே நெடுந்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்படி மருத்துவமுகாமில் பங்குபற்றி பயனடையுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி