பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளதாக தகவல்
visit
Sri Lanka
Narendra Modi
March
Indian Prime Minister
By Vanan
இலங்கை - இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல விஜயங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சை மேற்கொள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று, இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் புதுடில்லிக்கான தனித்தனியான விஜயங்களை முடித்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
