வழிபட சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு - இளம் பிக்கு கைது
Child Rehabilitation Center
Matara
Child Abuse
By Sumithiran
பிக்கு கைது
மாத்தறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகளால் புகுல்வெல்ல விகாரை ஒன்றின் 28 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாரைக்கு வழிபட வந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், நீண்ட விசாரணையின் பின்னர் பிக்கு கைது செய்யப்பட்டதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
