பிள்ளைகளை மரத்தில் தொங்கவிட்டு சித்திரவதை: தாய் கைது

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Sumithiran May 29, 2024 11:10 PM GMT
Report

11 வயதான ஒரு பிள்ளையை மரமொன்றில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன் இரண்டரை வயது ஆண் பிள்ளையை தொங்கவிட்டு, அடித்து துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவ்விரு பிள்ளைகளின் தாயாரான 28 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு(batticaloa) ஏறாவூர் காவல்துறை பிரிவில் உள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்ட இரு சிறுவர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூன்று திருமணம்

முதலாவதாக இந்து முறைப்படி திருமணம் முடித்த குறித்த பெண், கணவனை விட்டுவிட்டு அவருக்கு பிறந்த முதல் குழந்தையுடன் இஸ்லாம் மதத்துக்கு மாறி, முஸ்லிம் நபரொருவரை திருமணம் முடித்துள்ளார். அவ்விருவருக்கும் குழந்தைகள் இல்லை.

பிள்ளைகளை மரத்தில் தொங்கவிட்டு சித்திரவதை: தாய் கைது | Mother Arrested For Torturing Children

இந்நிலையில், அவரையும் விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். அவ்விருவருக்கும் இரண்டரை வயதில் ஆண் பிள்ளை உள்ளது. அவரையும் விட்டுவிட்டு, தன்னுடைய இரு பிள்ளைகளுடன் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்துக்கு மீண்டும் வந்து அங்கு வாழ்ந்து வருகின்றார்.

டென்மார்க்கில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு : முகநூலில் பரவும் போலி விளம்பரம்

டென்மார்க்கில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு : முகநூலில் பரவும் போலி விளம்பரம்

 புகைத்தலில் ஈடுபட்டார் என தெரிவித்து

தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை, புகைத்தலில் ஈடுபட்டார் என தெரிவித்து அச்சிறுவனை பிடித்து மரமொன்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். ஏப்ரல் மாதத்திலேயே இவ்வாறு சித்திரவதை செய்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

பிள்ளைகளை மரத்தில் தொங்கவிட்டு சித்திரவதை: தாய் கைது | Mother Arrested For Torturing Children

அதேவேளை, இரண்டாவது இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தந்தையான புத்தளத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது.

உலகில் அதிக முறை கைதானவர் மரணம்

உலகில் அதிக முறை கைதானவர் மரணம்

அதனையடுத்து உடனடியாக ஏறாவூருக்கு சென்று, தன்னுடைய மகனை தருமாறு அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த தந்தை, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரணை செய்த காவல்துறையினர், அந்த தாயாரின் அலைபேசியை சோதித்துள்ளனர். அதில், அவ்விரு சிறுவர்களையும் தடியால் அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் எடுக்கப்பட்ட காணொளிகள் இருந்துள்ளன.

அதன்பின்னர், அப்பெண்ணை கைது செய்த காவல்துறையினர், அவ்விரு பிள்ளைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த பெண்ணை, நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஏறாவூர் காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026