கொல்கத்தாவில் பயங்கரம் : சூட்கேசில் கொண்டு வந்த பெண்ணின் சடலத்தை ஆற்றில் வீச முயன்ற தாய்,மகள் கைது
சூட்கேசில் கொண்டுவந்த பெண்ணின் சடலத்தை கங்கையாற்றில் வீச முயன்ற தாய், மற்றும் மகளை கொல்கொத்தா காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொல்கத்தாவின் குமர்துலி பகுதியில் உள்ள கங்கை நதிக்கரையில் ஏராளமானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்கள் இழுக்க முடியாத பாரத்துடன் சூட்கேசுடன் வந்தனர்.
சூட்கேசுடன் வந்திறங்கிய பெண்கள்
இதையடுத்து யோகா பயிற்சிக்கு வந்த ஒருவர், 'சூட்கேசில் என்ன இருக்கிறதுஅதை ஏன் ஆற்றில் வீச செல்கிறீர்கள்' என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்கள், 'எங்கள் செல்ல நாய் இறந்து விட்டது. அதை ஆற்றில் வீச வந்தோம்' என, தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து ஏராளமானோர் அங்கு திரண்டு அவர்களை மாறி மாறி கேள்வி கேட்டதால் வேறு வழியின்றி அதில் ஒரு பெண், சூட்கேசில் இருப்பது தனது அண்ணியின் சடலம் என்றும், அவர் தற்கொலை செய்ததால் சடலத்தை ஆற்றில் வீச கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
விசாரணையில் வெளியான தகவல்
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இரண்டு பெண்களிடமும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் கொல்கத்தா அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் தாய், மகள் என்பதும் தெரியவந்தது.
சூட்கேசில் சடலமாக இருக்கும் பெண், அவர்களது உறவினர் என்பதும் தெரியவந்தது. அந்த பெண் கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்