நான்குநாள் சிசுவை வீதியில் விட்டுச் சென்ற தாய் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவை கைவிட்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் தாயொருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வத்தேகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்கடுவ பிரதேசத்தில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் பிறந்து 4 நாட்களே ஆன சிசு கைவிடப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறியில் வந்து சிசுவை விட்டுச் சென்றுள்ளதுடன்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய மாதாகே கரகஹின்ன பிரதேசத்தை சேர்ந்தவராவார். சந்தேக நபர் லொறியில் வந்து சிசுவை விட்டுச் சென்றுள்ளதுடன் லொறி சாரதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 01ஆம் திகதி குழந்தையைப் பெற்றெடுத்த அவர், 04ஆம் திகதி குழந்தையை விட்டுச் சென்றுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி