வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்நூறு இளைஞர்களுக்கு அதிபர் நிதியத்தின் ஆதரவுடன் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்தை அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் போதே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மனிதவளம் மற்றும் பாதுகாப்புத் துறை அதன் ஒருங்கிணைப்பைச் செய்து வருகிறது.
பயிற்சிக் கல்லூரி
அத்தோடு இதற்கான செலவை அதிபர் நிதியம் ஏற்பதுடன் இந்தப் பயிற்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளை இலக்காகக் கொண்டது.
இலங்கை ஹோட்டல் பயிற்சிக் கல்லூரியின் பாடநெறிகளுக்கு இளைஞர்கள் வழிநடத்தப்படுவதுடன் ஹோட்டல்துறையில் வேலைவாய்ப்பைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இளைஞர்கள் நேரடியாக வேலைகளுக்கு வழிவகுக்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |