சீன அதிபருக்கு மகிந்த அனுப்பிய முக்கிய செய்தி
மூன்றாவது முறையாக தெரிவு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சீனாவின் துரித சமுக பொருளாதார வளர்ச்சிக்கான மக்களை மையமாகக் கொண்ட கொள்கைக்கான பரந்த பொது ஆதரவையும் உங்கள் தலைமையின் வலிமையையும் தைரியத்தையும் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன” என சீன அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் வலுவான ஒத்துழைப்பு
ஷி ஜின்பிங்கின் தலைமையில் சீனாவுடனான வலுவான ஒத்துழைப்பை தொடர இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அதிபர் ஷி ஜின்பிங் நேற்று (22) தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டின் அதிபராக அவா் 3 ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீன வரலாற்றில் ஒரு அதிபர் 3-ஆவது முறையாக பதவி நீடிப்பு பெறவிருப்பது இதுவே முதல்முறையாகும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
