முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவுனியாவில் விபத்தில் பலி
வவுனியா ஓமந்தை கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பரிதாபகரமாக மரணமடைந்தார்
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த வைத்திய அதிகாரியின் வாகனம் ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது.
வைத்தியர் படுகாயமடைந்த நிலையில்
விபத்தில் வைத்தியர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன் அதனைச்செலுத்திச்சென்ற வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு 07 மணியளவில் மரணமடைந்தார்.
சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் முன்னாள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன் அவர்களே மரணமடைந்துள்ளார்.
டிப்பர் வாகனத்தின் சாரதி காவல்நிலையத்தில் சரண்
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், வாகனம் முந்திச்செல்ல முற்ப்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |