பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !
பிரித்தானியாவில் (United Kingdom) உணவுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு உலகத்தமிழ் வரலாற்று மைய முள்ளிவாய்கால் முற்றத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் உணர்வெழுச்சியுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கொடி
பெருந்திரளான பொதுமக்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்பாட்டாளர்கள் ,நாடுகடந்த தமிழீழ அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகியோரினால் நினைவுகூறல் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய கொடியை சறோக்கீற் கவுன்சிலர் சசி மயில்வாகனம், தமிழீழ தேசியக்கொடியை முன்னாள் போராளி முகுந்தன், பொதுச்சுடரினை கேணல் கண்ணன் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஞானச்செல்வம் உதயராஜாவின் மகன் பவசுதன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
பொதுச்சுடரினை தொடர்ந்து பொதுமக்கள் நினைவுச்சுடர்களை ஏற்றி நினைவு கூர்ந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையை பாலா மாஸ்டர் கந்தையா பாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.
இதையத்து, கலைநிகழ்வுகள் இடம்பெற்று பிரபாகரம் பெருந்திரைக்காட்சி காட்சிப்படுத்தப்பட்டு தொடர்ந்து முள்ளிவாய்கால் நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பில் சர்வதேச விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பு என்பவற்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
