பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day United Kingdom
By Santhru May 19, 2025 02:33 PM GMT
Report

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவேந்தல் நினைவுகூரப்பட்டது.

உறவுகளை இழந்தவர்களின் ஒன்றிணைவோடு நிகழ்வுகள் 

இன்று (18.05.2025) மாலை 5.15 மணியளவில் சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் ஒன்றிணைவோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ! | Mullivaikkal Commemoration Event In Britain

பிரித்தானிய கொடியினை சரோ பிரதேச கவுன்சிலர் சசி மயிலவாகனம் ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை முகுந்தன்  ஏற்றி வைத்தார்.

அடுத்ததாக இறுதி கட்ட போரில் இறந்தோரை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம்பெற்றது.

குழியை தோண்ட வைத்து குழிக்குள் சுட்டுத்தள்ளிய சிறிலங்கா இராணுவம்

குழியை தோண்ட வைத்து குழிக்குள் சுட்டுத்தள்ளிய சிறிலங்கா இராணுவம்

 நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம்

அதனைத்தொடர்ந்து பிரதான நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் செயற்பட்டு முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கேணல் கண்ணன் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஞானச் செல்வம் உதய ராசா அவர்களின் புதல்வன் பவசுதன் உதயராசா ஏற்றி வைத்தார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ! | Mullivaikkal Commemoration Event In Britain

அதன் தொடர்ச்சியாக அங்கே குழுமி இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர். தொடர்ந்து நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இளையோரான செல்வி சௌமிகா புஷ்பராஜா ஆங்கிலத்தில் தன் உணர்வுகளை வெளி கொணர்ந்தார். அதனைத்தொடர்ந்து தமிழர் இனப்படுகொலையின் தனது உணர்வுகளை கவிதையாக செல்வி கிசானி விக்னேஸ்வரராஜா அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.

கனடாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கனடாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பேருரை

தொடர்ந்து தொழிற்கட்சிக்கான தமிழ் அமைப்பின் தலைவர் ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் சென் கந்தையா வழங்கி வைக்க பாலகிருஷ்ணன் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பேருரையினை வழங்கினார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ! | Mullivaikkal Commemoration Event In Britain

அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் பிறந்த சிறுமியான செல்வி சானுகா தவராசா,முள்ளிவாய்க்கால் இனவழிப்பு சம்பவத்தினை கவிதையாக தொகுத்து வழங்கினார்.

சம நேரத்தில் வளாகத்தில் அமைந்துள்ள பொது நினைவு தூபியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.

ஈழத்தமிழர்களுக்கு கனேடிய பிரதமர் வழங்கிய உறுதிமொழி

ஈழத்தமிழர்களுக்கு கனேடிய பிரதமர் வழங்கிய உறுதிமொழி

முள்ளிவாய்க்கால் கஞ்சி

நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த மனிதம் வென்ற கணங்கள் எனும் நினைவு பாடல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ! | Mullivaikkal Commemoration Event In Britain

இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர்.   

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023