தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரி இவர் தான்..!
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவராக பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இருக்கின்ற விடயத்தை நினைவுப்படுத்துவதாக தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.லவக்குமார் கூறுகிறார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயபுரம் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
'வடக்கு கிழக்கிலே பல யுத்தங்கள் நடந்திருக்கின்றன, அதிலும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்,
படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாய் இருந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள்.
அந்தக் காலங்களில் இருந்த சிங்கள பேரினவாத அரசின் ராஜபக்ச குடும்பமாக இருக்கலாம், சிறிலங்கா இராணுவமாக இருக்கலாம்.
அதேபோல தமிழின மக்கள் அடிக்கப்படுவதற்கு காரணமாக இருந்து பிள்ளையார் சுழி போட்ட ஒருவர் பேத்தாளை மண்ணிலும் இருக்கின்றார். அவர் தான் பிள்ளையான்” - என்கிறார் லவக்குமார்
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)