முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உண்மைகளை வெளிக்கொணர்ந்த இணைத்தலைவர்..!
ஒவ்வொரு நினைவேந்தல் நிகழ்வையும் நாங்கள் உரிய முறையிலே திட்டமிட்டு அதை ஒவ்வொரு அமைப்பும் உரிய முறையிலேயே செயல்படுத்த வேண்டும் என நினைவேந்தல் கட்டமைப்பின் இணைத்தலைவர் லியோ ஆம்ஸ்ட்ரோங் அடிகளார் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாட்டை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கட்டமைப்பு மேற்கொள்ளவது போல நாம் திட்டமிட்டு ஒவ்வொரு இடத்திலும் அரங்கேறிய படுகொலைகளை அந்தந்த காலத்திலேயே நினைவுகூறுவது அவசியமான ஒன்று என்றும் அது போதிய அளவிலே இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய இளைஞர்கள் போதைகளுக்கு அடிமையாகி எமது இனத்தின் போராட்ட வரலாற்றை மறந்து விட்டார்கள் எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இது மட்டுமல்லாது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகள் பற்றி பல உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
அவை பற்றிய முழுமையான தகவல்கள் காணொளியில்..
