தமிழர் பிரதேசங்களில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழர் பிரதேசங்களில் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக மூதூர் -கட்டைபறிச்சான் பகுதியில் இன்று வியாழக்கிழமை (14) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இதனை சம்பூர் -ஆலங்குளம் மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்திருந்தது.
மூதூர் -கட்டைபறிச்சான்
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அத்தோடு, முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி நினைவஞ்சலிம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
காரைதீவு பிரதேச சபை
இதன்தொடர்ச்சியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இன்று காரைதீவு பொதுச் சந்தைக்கு முன்பாகவும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தனர்.
நிறைவாக அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது,
🛑 you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




