சூறாவளியால் கவிழ்ந்தது இழுவைப் படகு -ஐந்து மீனவர்கள் மாயம்
Trincomalee
Sri Lanka
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Sumithiran
திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் இழுவை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானநிலையில் படகோட்டி உட்பட ஐவர் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
"சஸ்மி துவா 02" என்ற இழுவைப்படகே ஆழ்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கவிழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி திருகோணமலையில் இருந்து குறித்த படகு புறப்பட்டு சென்றுள்ளது.
காணாமல் போன மீனவர்களை தேடுமாறு கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்