உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறையினர்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Death
By pavan
வத்தளை ஹேகித்த பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 அடி 06 அங்குலமுடைய கோடிட்ட அரைக்கை மேற்சட்டை அணிந்தவரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.