பக்தர்களின் அரோகரா கோசத்துடன் அலங்கார தேரேரி வந்தான் நல்லையம்பதி கந்தன்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (09.09.2026) வெகு விமரிசையாக இடம்பெறுகிறது.
கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் வருடாந்த திருவிழா, நாளை (10) நடைபெறும் தீர்த்தத் திருவிழா மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அலங்காரக் கந்தனாக நல்லூர் கந்தசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
வருடாந்த தேர்த்திருவிழா
நேற்று சப்பரத் திருவிழா நடைபெற்ற நிலையில், இன்று தேர்த்திருவிழா இடம்பெறுகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை தீர்த்தத் திருவிழாவும் கொடியிறக்க நிகழ்வும் நடைபெறவுள்ளன.
நல்லூர்க் கந்தனை தரிசிப்பதற்காக நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணத்தில் திரண்டுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களும் பெருமளவில் வருகை தந்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24