உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து வெளியான அறிவிப்பு
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிட வேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக அனுப்புமாறு அந்தப் பிரிவினரிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்படவுள்ள வர்த்தமானி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பமாகிறது.
அதற்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானி மூலம் வெளியிடும் பொறுப்பு என்னிடம் உள்ளது. அதற்கு உங்களின் பெயர்கள் கிடைப்பது மிகவும் முக்கியமானது.
பெயர்களைப் பெற்று வர்த்தமானி செய்த பின்னரே, 50% குறைவாக வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர் அல்லது பிரதி தலைவர் நியமனம் செய்ய மாகாண ஆணையாளர்களுக்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
பெயர்கள் வர்த்தமானி செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் மாகாண ஆணையாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
