விண்வெளியில் நகரும் மர்ம பொருள் : குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்
விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக ஒரு மில்லயன் மைல் [ 16,09,344 kmph ] வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க (America) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA)தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பால் வெளியை வீட்டு இந்த பொருளானது ஒரு மில்லியன் மைல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம பொருள்
பிளான்ட் 9 என்ற திட்டத்தின் கீழ் நடந்த ஆய்வில் இந்த பொருளானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளுக்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
ஆகாயத்தை இன்பிராரெட் ஒளியின் வழியாக ஆராய்ந்த போது இந்த மர்ம பொருள் விஞ்ஞானிகள் கவனத்துக்கு வந்துள்ளது.
ராட்சத கிரகம்
இதை விண்களாகவோ மற்றும் நட்சத்திரமாகவோ உறுதியாக வகைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பொருளின் மையத்தில் ஹட்ரஜன் காணப்படவில்லைளெனவும் எனவே இதை வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வரையறைக்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |