ஹர்ஷ டி சில்வாவின் கருத்தை நிராகரித்தார் மாலைதீவின் முன்னாள் அரச தலைவர்!
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Harsha de Silva
By Kanna
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மாலைதீவின் முன்னாள் அரச தலைவர் மொஹமட் நஷீட் மறுத்துள்ளார்.
பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கான உதவிகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷ டி சில்வாவின் கூற்று
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தானும் மாலைதீவு முன்னாள் அரச தலைவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் இலங்கைக்கு உரிய திட்டங்கள் இல்லாததால் உலக நாடுகள் உதவிக்கு வர தயங்குவதாக மாலைத்தீவு முன்னாள் அரச தலைவர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

