அனுராதபுர புத்தருக்கு யாழ்ப்பாணத்தில் அரிசி எடுக்கும் நிகழ்வு
Anuradhapura
Jaffna
By Vanan
56 ஆவது தேசிய புத்தரிசி விழாவுக்காக அரிசி பெற்றுக் கொள்ளும் விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்த புத்தரிசி வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரியில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் நடைபெற்றது.
புத்தரிசி வழங்கும் நிகழ்வு
2023 ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியில் வாசம் செய்யும் புத்த பகவானை ஆராதிப்பதற்கு குறித்த புத்தரிசி சேகரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், விவசாயப் பணிப்பாளர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி