நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்! இருளில் மூழ்கப்போகும் இலங்கை: மின்சாரசபையின் தொழிற்சங்கம் அறிவிப்பு
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்வரும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
1. போட்டி ஏல முறையைப் பின்பற்றாமல், உள்ளூர் ஏலதாரர்களுக்கு எந்த சமமான வாய்ப்பையும் வழங்காமல், நாட்டின் காற்று மற்றும் சூரிய வளங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தல்.
2. 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தைத் திருத்துதல், கோரப்படாத முன்மொழிவுகள் மூலம் ஊழலுக்கு வழி வகுக்கும் போட்டி ஏல முறையை ரத்து செய்தல்.
3. கடந்த ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட CEBயின் தலைவரை நீக்காமல் இருப்பது.
இதேவேளை, புதிய சட்டத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.
மின்சாரத் துறையின் மேம்பாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் இன்றியமையாத நீண்டகாலமாகத் தாமதமாகிவரும் புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களை விரைவாக அனுமதிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் வழி வகுக்கும் சட்டத்தில் நாடாளுமன்றத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்குத் தேவையான ஆதரவை வியாழன் அன்று கிடைக்கும் என்று நம்புகிறேன். டுவிட்டர் பதிவின் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
2) Hope to get the necessary support on Thursday for the amendments made to the CEB Act in parliament, which will pave the way for quick approval and implementation of long delayed Renewable power projects which will be vital for the Power sector development and the Economy.
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 7, 2022
