முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க வேண்டுமா: இதை செய்தால் மட்டும் போதும்
ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் தங்களின் அழகாக காட்டுவதில் அதிக முக்கியத்துவம் காட்டுவார்கள். அதிலும் தங்களின் முக அழகை பராமரிக்க அதிகமாகவே முயற்சி செய்வார்கள்.
முகம் என்னதான் அழகாக இருந்தாலும் திருஷ்டி பட்டதைப்போல முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பது முக அழகையே கெடுத்து விடும்.
அதற்காக பல இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் பின் நாட்களில் அவை சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தி அழகையும், சருமத்தையும் பாதிப்படையச்செய்யும்.
சருமத்தின் அழகு
எனவே, இயற்கையான முறையில் அழகை பராமரிப்பது அழகையும், சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும், இயற்கை பொருட்கள் சருமத்திற்கு பாதுகாப்பானவை, அவை எந்த இரசாயனமும் இல்லாதவை என்பதால் சருமத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன.
இயற்கையான முறையில் கரும்புள்ளிகளை நீக்குவது எவ்வாறு என பார்க்கலாம்.
வீட்டிலிருக்க கூடிய கடலை மாவு,தேன் என்பவற்றை வைத்து கரும்புள்ளிகளை நீக்கலாம்.
கடலைமா, தேன்
கடலைமாவானது அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். தேன் முகம் மற்றும் சருமத்துக்கு நன்மை தரக்கூடியது.
இது முகப்பரு, மந்தமான தோற்றம், வறண்ட சருமம்,சீரற்ற சரும போன்ற பிரச்சனைகளுக்கு உதவக்கூடும். கலப்படமில்லாத தேனாக பயன்படுத்துவது நன்று.
கரும்புள்ளிகளை நீக்குவது எவ்வாறு
முதலில் முகத்தை சுத்தமான நீரினால் கழுவவும்.
கடலை மாவுடன் தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசி அரைமணிநேரத்திற்கு பின்னர் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வர கரும்புள்ளி மறையும்.
அந்த முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும். கடலை மாவு சரும வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்க உதவும், முகத்தில் இருக்கும் தழும்புகள் மறைய, தேனைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவிவந்தால் தழும்புகள் மறையும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |