ஹிட்லரின் பாணியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ரணிலால் ஒரு போதும் முடியாது!
நாசிக் கட்சியை பயன்படுத்தி ஜெர்மனியில் ஹிட்லர் தனது ஆட்சியை நிலை நாட்டியது போல இலங்கையின் நெருக்கடி நிலையை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா அதிபராக பதவியேற்றுள்ளார் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க தம்மை ஹிட்லர் போல் சிலர் பார்ப்பதாக தெரிவித்திருந்தார். எனினும் அது மறுக்க முடியாத உண்மை.
பொருளாதார நெருக்கடியை தீர்க்க ரணிலால் முடியாது
இலங்கையில் நடைபெறும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களை ஜனநாயகமற்ற ரீதியில் கட்டுப்படுத்த சிறிலங்கா அதிபர் முயற்சித்தால் அதனை தமது கட்சி எதிர்க்கும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தம்மால் நிவர்த்தி செய்ய முடியுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்ற போதிலும் அது அவரால் முடியாத காரியம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
