சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலை தாக்கியழிக்க முயன்ற பாகிஸ்தான் : வெளிவரும் பகீர் தகவல்
பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலை பாகிஸ்தான்(pakistan) தாக்க முயன்றபோதும் அதன் மீது ஒரு கீறல் கூட விழாமல் பாதுகாத்ததாக இந்திய இராணுவம்(indian army) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி அதனை முறியடித்தமை தொடர்பாக இந்திய இராணுவத்தின் 15வது படைப் பிரிவு மேஜர் ஜெனரல் கார்த்திக் சேஷாத்ரி தெரிவித்தவை வருமாறு,
பொற்கோவில் முக்கிய இலக்காக இருக்கலாம்
பாகிஸ்தான், பொற்கோவிலை நோக்கி ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய வான்படை வழிமறித்து தாக்கி அழித்தது. அவர்களிடம் சரியான இலக்குகள் இல்லை என்பதை கண்டறிந்தோம்.
எனினும், பொற்கோவில் முக்கிய இலக்காக இருக்கலாம் என்று யூகித்து, அதை பாதுகாக்க நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை தயார்படுத்தினோம்.
ஒரு கீறல் கூட விழாமல் பாதுகாத்தோம்.
அதன்படி பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்து, பொற்கோவிலுககு ஒரு கீறல் கூட விழாமல் பாதுகாத்தோம். அதன் பின்னர், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
