அமெரிக்காவின் ஆதரவு! தனித்தும் செயல்பட தயார் என அறிவித்த நெதன்யாகு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாம் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காசாவின் தெற்கு எல்லை நகரமான ராபாவில் தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்தினால் அங்குள்ள வேறு பிராந்தியங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, காசாவின் 23 லட்சம் மொத்த மக்கள் தொகையில் பகுதிக்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிலையில், போரில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் திட்டம்
மேலும், நட்பு நாடுகளுக்கு இடையேயான விரிசல்களில் மற்றுமொன்று என கூறிய அவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாங்கள் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் என்றும் சாடியுள்ளார்.
இந்நிலையில், சாசாவில் போர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான மத்திய காஸாவுக்கு மக்களை இடம்பெயர செய்ய அறிவுறுத்தும் திட்டம் இருப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |