ஆத்திரத்தின் உச்ச கட்டத்தில் நெதன்யாகு: ட்ரம்ப்புக்கு எதிராக சீற்றம்
காஸா (Gaza) அல்லது லெபனான் (Lebanon) மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு (Israel) எவர் ஒப்புதலும் தேவையில்லை என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளால் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம் எனவும் மற்றும் எங்கள் தலைவிதியை நாங்களே தொடர்ந்து தீர்மானிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு திட்டவட்டம்
இதற்காக நாங்கள் யாருடைய ஒப்புதலையும் பெறப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், எங்கள் பாதுகாப்பை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் எனவும் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு மட்டுமின்றி இஸ்ரேலின் இதுவரையான அனைத்து இராணுவ நடவடிக்கைகளிலும் அமெரிக்கா தனது முழு ஆதரவையும் அளித்து வந்துள்ளது.
இஸ்ரேலின் ஏவுகணை
வளைகுடா நாடான கட்டார் மீதான இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அமெரிக்கா (United States) கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதுடன் இனி அவ்வாறு நடக்காது என்று மட்டும் அறிவித்தது.

இருப்பினும், கட்டார் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அமெரிக்கா கடுமையாக கண்டித்ததுடன் பதிலடி உறுதி என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையிலேயே, இஸ்ரேலின் எதிரிகள் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் தேவை இல்லை என அமைச்சர்கள் கூட்டம் ஒன்றில் நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்