இணையவழியில் அபராதம் செலுத்தும் முறை : செப்டெம்பரில் நடைமுறை
இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இணைவழியில் அபராதம்
இணைவழியில் அபராதம் செலுத்துவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, சில வாரங்களுக்கு முன்பு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே இந்த மாத இறுதிக்குள் மேல் மற்றும் தென் மாகாணங்கள் ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள காவல்நிலையங்களை இணைப்பதன் மூலம் முதல் கட்டமாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம்
அதன் பிறகு, மிக விரைவான திட்டத்தின் கீழ், செப்டெம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களையும் உள்ளடக்கி நேரடியாக அபராதம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார். ]
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

