இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்கள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி
Consumers Welfare Association
Sri Lanka
Sri Lanka Government Gazette
By Sumithiran
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை காட்சிப்படுத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (நவம்பர் 01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) தலைவர் சாந்த நிரியல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை

அதன்படி,இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மிட்டாய் (சூயிங்கம் உட்பட), சொக்லேட், பிஸ்கட், கேக் மற்றும் சோப்ஆகியவற்றின் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆங்கிலத்தில் தெளிவாகக் காட்டப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.