கொழும்பில் 2,500 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு பங்களிப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் உடைய மற்றும் வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு 2026ஆம் ஆண்டிற்குள் புதிய வீடுகள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (16) கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் கட்டுமானத்திலுள்ள ‘ஸ்டேடியம்கம’ (Stadiumgama) வீடமைப்புத் தொகுதியை நேரில் பார்வையிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வீடுகளை வழங்குவது என்பது வெறும் கட்டிடங்களை வழங்குவது அல்ல. அவை மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய முழுமையான குடியிருப்புகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூகத் தேவைகள்
மக்கள் குடியேறுவதற்கு முன்னர் பாதுகாப்பு, சமூகத் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் மூன்று வீடமைப்புத் திட்டங்கள் கையளிக்கப்படவுள்ளன என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொழும்பில் மொத்தம் 7,000 புதிய நகர்ப்புற வீடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
தனி வீடுகளில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறும் குடும்பங்கள், பொதுவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் வாழ வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்