மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கே.குணநாதன் நியமனம்
புதிய இணைப்பு
கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளி கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளாராக கே. குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் இன்றையதினம் (11.12.2024) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ் மந்ரிநாயக்க (M.L.A.S. Manthrinayake) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நியமனக் கடிதம்
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து எம். ஏ. எல். எஸ். மந்ரிநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சின் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நவம்பர் மாதம் 18ஆம் திகதி பதவியேற்றுள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சின் பிரதி அமைச்சராக ரத்ன கமகே (Rathna Gamage) நவம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |