தோல்வியை ஒப்புக்கொண்ட பொரிஸ் ஜோன்சன்: சற்றுமுன் வெளியான அறிவிப்பு - புதியவர் யார்..!
Boris Johnson
United Kingdom
Rishi Sunak
By pavan
பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதேவேளை, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்புக்கான போட்டியில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 140 எம்பிக்களின் ஆதரவுடன் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் புதிய பிரதமராக இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த பிரதமர்
இந்நிலையில், 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தான் பிரதமருக்கான போட்டியில் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், வேட்புமனு இன்று மதியம் 2 மணியுடன் முடிவடைய உள்ளது.
ஒருவேளை இன்று மதியம் 2 மணிக்குள் டோரி எம்.பிக்களில் 100 ஆதரவாளர்களைப் பெற பென்னி மோர்டான்ட் தவறிவிட்டால், இன்னும் சில மணி நேரங்களுக்குள் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி