வடக்கில் தமிழரின் காணிகள் சுவீகரிப்பு ..! அமைச்சர் பிமல் வெளியிட்ட தகவல்
வடக்கில் உள்ள காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாதென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன் காணிகளை சுவீகரித்து அவற்றை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டிய தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி
கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடன் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(gajendrakumar ponnampalam) நேற்று(20) சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையை முன்வைத்தார்.
மேற்படி வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டியதன் அவசியத்த்தையும் அவர் வலியுறுத்தினார். இந்தவிவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க(bimal rathnayaka),
காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை
“ மக்களுக்குரிய காணிகளை சுவீகரிப்பதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. வடக்கில் எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். வடக்கு மக்களும் எமது பக்கம் உள்ளனர்.
எனவே, அங்குள்ள மக்களின் காணியை பறித்து வேறு நபர்களுக்கு வழங்கவேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது. வேறு நபர்களை குடியேற்ற வேண்டிய தேவைப்பாடும் எமக்கு கிடையாது.” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், ராஜபக்சக்கள், ரணில்களை பார்த்ததுபோல எம்மையும் சந்தேக பார்வையுடன் பார்க்க வேண்டாம். தேர்தல் காலங்களில் வேண்டுமானால் அரசியல் நடத்துங்கள்.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
