கொழும்பிலுள்ள நோர்வே தூதாரகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு
Colombo
Sri Lanka
Norway
By Sumithiran
நோர்வே அரசின் அறிவிப்பு
வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் வலையமைப்பு தொடர்பான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து நோர்வே தூதரகங்களை 2023 ஜூலை இறுதிக்குள் நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது
இதேவேளை, கொழும்பில் உள்ள தூதரகத்தை மூடும் முடிவு நோர்வேக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தூதரகம் தெரிவித்துள்ளது.
நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு நோர்வே அரசு உறுதிபூண்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி