மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க என்ன செய்யவேண்டும் : ட்ரம்ப் அளித்த அறிவுரை
மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க, கதவுகள் எப்போதும் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு (emmanuel macron)அறிவுரை கூறியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்(donald trump)
விமானத்திலிருந்து கீழே இறங்கும்போது, பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் அவரது மனைவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு, மக்ரோனை, அவரது மனைவி ப்ரிக்கிட் அடித்ததாகக் கூறப்படுகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு விழுந்த அடி
எதிர்பாராதவிதமாக, விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது நடந்த இந்த சண்டையின் ஒரு பகுதி கைபேசியில் படம்பிடிக்கப்பட்டு, அது எப்போதும் போல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.
இந்த நிலையில், இந்த காணொளி காட்சிகள் குறித்து வெள்ளிக்கிழமை தனது ஓவல் அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் மக்ரோனுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி அவரது நலத்தை விசாரித்ததாகவும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் செய்தியாளர்களுக்கு உறுதி அளித்தார்.
கதவுகள் மூடி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்
அவர்கள் இருவருமே மிகச் சிறந்தவர்கள், எனக்கு அவர்களை மிக நன்றாகவே தெரியும். ஆனால், அன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை என்றார் ட்ரம்ப். பொதுவாக எதையுமே தெரியாது என்று ஒப்புக் கொள்ளாத ட்ரம்ப் முதல் முறையாக இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.
இந்த உரையாடலை நகைச்சுவையாக முடிக்க நினைத்த டொனால்ட் ட்ரம்ப், ஒரு உலகத் தலைவர், மற்ற உலகத் தலைவருக்கு அளிக்கும் அறிவுரையாக இதை எடுத்துக் கொள்ளவும், எப்போதும் கதவுகள் மூடி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும் என்று கூறியதைக் கேட்டு அவரும், அங்கிருந்தவர்களும் பலமாக சிரித்தனர்.
முன்னதாக, மனைவியிடம் அடிவாங்கியதாக வெளியான காணொளி குறித்து மக்ரானே விளக்கமும் கொடுத்துள்ளார். அதில், நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கிண்டலும் கேலியும் செய்துகொண்டிருந்தோம் என்று கூறியிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
