மறைந்து வாழவில்லை- எவரைக் கண்டும் பயமில்லை - உக்ரைன் அதிபர் மிரட்டல்
“யாரைக்கண்டும் பயப்படவில்லை '' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 13வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து தலைநகர் கீவ் நகரில் தங்கி உள்ளார். தொடர்ந்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் மக்களிடம் பேசி வருகிறார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவிக்கையில், நான் கீவ் நகரின் பன்கோவா தெருவில் தான் தங்கியுள்ளேன். மறைந்து வாழவில்லை. யாரை கண்டும் பயமில்லை.
தேசப்பற்று மிக்க இந்த போரில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். புடினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் கீவ் இல் தான் இருக்க போகிறேன் என அவர் கூறியுள்ளார்.
