முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவித்தல்
இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும், 2024ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 2ஆம் கட்;ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 24 ஆரம்பமாகும் என்பதுடன், மே மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சு அறிவிப்பு
பின்னர், விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 3ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஜூன் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பின்னர், 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, 3ஆம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும், 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |