அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்...!

Anura Kumara Dissanayaka Sri Lanka
By Shalini Balachandran Aug 31, 2026 05:15 AM GMT
Report

இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (30-08-2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரவு 10 மணி முதல் 6 மணி வரை வருகிறது புதிய தடை: வெளியான அதிரடி அறிவிப்பு

இரவு 10 மணி முதல் 6 மணி வரை வருகிறது புதிய தடை: வெளியான அதிரடி அறிவிப்பு

O5BXCQI

நாடாளுமன்ற தேர்தல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், ஊழலற்ற நிர்வாகம், முறைமை மாற்றம் மற்றும் எரிபொருள், மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

சமீபத்திய வெரிடே ரிசர்ச் ஆய்வறிக்கையின்படி, அரசின் மீதான மக்களின் செல்வாக்கு 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதுடன் பொருளாதாரத்தைக் கையாள்வது குறித்த நம்பிக்கை 40 சதவீதத்துக்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்...! | Npp Government Popularity Drops Below 50 Percent

நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்தவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது என்று அரசு கூறுவது அப்பட்டமான பொய்.

நாட்டின் நிலுவையிலுள்ள வழக்குகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே உள்ளனவே தவிர உயர் நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திலோ அல்ல.

தன் விருப்பத்துக்கு ஏற்ப இயங்கும் ஒரு நீதித்துறை அமைப்பை உருவாக்கவே அரசு முயல்கின்றது.

யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல்: காவல்துறை பிணையில் சென்றவருக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல்: காவல்துறை பிணையில் சென்றவருக்கு நீதிமன்றின் உத்தரவு

பொருளாதாரப் பிரச்சினை

இதற்கு எதிராக வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயன்ற எந்தவொரு அரசும் நீதிமன்றத்திடமிருந்து தக்க பதிலடியையே பெற்றுள்ளன என்ற வரலாற்றை இந்த அரசு நினைவில்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்...! | Npp Government Popularity Drops Below 50 Percent

மக்களின் உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

22 ஆவது திருத்தம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் ஓடிய நீதி அமைச்சர், எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது அரசுடன் விளையாட வேண்டாம் என கூறி தனது அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகார மமதையில் இந்தத் திருத்தத்தைப் பலவந்தமாக நிறைவேற்ற முயன்றாலும் இறுதியில் மக்கள் முன்னிலையில் அரசால் தலைநிமிர்ந்து நிற்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

மௌனம் கலைத்த அர்ஜுன மகேந்திரன்! அரசாங்கம் போலித் தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

மௌனம் கலைத்த அர்ஜுன மகேந்திரன்! அரசாங்கம் போலித் தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016