தீபாவளி தினத்தில் அதிர்ஷ்ட யோகம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்.! இன்றைய ராசிபலன்கள்
இன்று மங்கலகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 07 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி).
இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அமாவாசை அன்று தான் தீபாவளி வரும். ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாளில் தீபாவளி வருகிறது.
தீபாவளி தினத்திலே ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் கூறுகின்றார் இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள்.
இன்றைய ராசிபலன்கள்
தீபாவளி
தீபம் என்றால் “விளக்கு” என்று பொருள். “ஆவளி” என்றால் “வரிசை” என்று பொருள் . வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளியை இந்துக்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மக்களும் கொண்டாடுகின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படும் அனைவருக்கும் ஐபிசி தமிழின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
