யாழில் கொலை குற்றவாளியால் 66 வயது மூதாட்டி வன்புணர்வு..! காவல்துறை அசண்டையீனம்
யாழ். பருத்தித்துறை பகுதியில் போதை பொருளுக்கு அடிமையான 40 வயதுடைய ஒருவரால் 66 வயதான பெண் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
கடந்த 9 ஆம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு முன்னால் குறித்த சந்தேக நபர் இரவுவேளை ஹெரோய்ன் அடித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் வெளியே வந்ததும் அவரது வீட்டு வாசலில் வைத்தே குறித்த பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது 70 வயதான சகோதரி அங்கு வந்த போது அவர் மீது சந்தேக நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த இரு பெண்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மறுநாள் சிகிச்சைக்க்காக சேர்க்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
அசமந்த போக்கில் காவல்துறை
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு 9 நாட்கள் கடந்தும், இதுவரை குறித்த சந்தேக நபர் காவல்துறையினர் கைது செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சந்தேக நபர் கடந்த 9 ஆம் திகதியே சிறையில் இருந்து விடுதலையானார் எனவும் அவர் மீது கொலை மற்றும் போதை பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் என்பன உள்ளன எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட நபர் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
