உணவு தொண்டையில் சிக்கி குழந்தை பலி
Sri Lanka Police Investigation
By Vanan
பொகவந்தலாவை பகுதியில் உணவு தொண்டையில் சிக்கி குழந்தையொன்று(வயது - 1½) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
26 வயதுடைய தாய் ஒருவர் தனது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போதே உணவு தொண்டையில் சிக்குண்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ளது.
பிரேத பரிசோதனை
பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (வயது - 1½) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொகவந்தலாவை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
