இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் 47 திருத்தங்கள்!
இலங்கையில் ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த சட்டத்தில் 47 திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
47 திருத்தங்கள்
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தை சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தரப்பினர் எதிர்த்துள்ள நிலையில், இது தொடர்பில் பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் குறித்த தரப்பினரால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவாதம்
இது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் ஒப்புதலுக்காக இன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி இணையவழி பாதுகாப்பு சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |