ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகம் உள்ள நாடுகள்! பாகிஸ்தானுக்கு கிடைத்த இடம்
ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் பாகிஸ்தான் (Pakistan) ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் (NCHR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார சவால்கள், அரசியல் ஸ்திரமின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பயங்கரவாதம் மற்றும் குறைந்த கல்வி வாய்ப்புகள் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறி, கிட்டத்தட்ட 40% பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இடம்பெயர்வு
2022 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக குடியேறிய முதல் 10 நாடுகளில் பாகிஸ்தான் இல்லை என்றும், 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது என்றும் கூறப்பட்டுள்ளது.
2023 டிசம்பருக்குள், 8,778 பாகிஸ்தானியர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ளனர். பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் துபாய், எகிப்து மற்றும் லிபியாவை உள்ளடக்கிய பாதைகள் வழியாக பயணித்துள்ளனர்.
2023 இன் முதல் பாதியில், சுமார் 13,000 பாகிஸ்தானியர்கள் இந்தப் பாதைகள் வழியாக ஐரோப்பாவை அடைந்துள்ளதுடன் 10,000 பேர் திரும்பி வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்
பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் (AJK), மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் 42%, கைபர் பக்துன்க்வாவில் 38%, சிந்துவில் 37.6%, மற்றும் இஸ்லாமாபாத்தில் 36.5% பேர் வெளியேற விரும்பியுள்ளதாக தெரிவிித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பாவிற்கு சட்டவிரோத குடியேற்றம் 280% அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கிரேக்கப் பேரிடரைத் தொடர்ந்து மனிதக் கடத்தல்காரர்கள் மீதான நடவடிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்ஐஏ) தீவிரப்படுத்தியது.
2023ல் 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 854 பேர் கைது செய்யப்பட்டனர். 2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 25,000 பாகிஸ்தானியர்கள் விமானம் மூலமாகவும், 3,150 பேர் தரை வழியாகவும், 10,366 பேர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |