தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் - சகல பதவிகளில் இருந்தும் விலகினார் பரஞ்சோதி

TNA Mavai Senathirajah
By Vanan Oct 09, 2022 01:19 PM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போதுள்ள கோப்பாய் பிரதேசசபை தவிசாளரை மாற்றுமாறு விடுத்த கோரிக்கையினை செயற்படுத்த தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா தவறிவிட்டார்.

இதன் அடிப்படையிலும், கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையான நிலையில் தலைவர் காணப்படுகின்றார் என்பதனடிப்படையிலும் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

தனது விலகல் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சிக்குள் குழப்பம்

தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் - சகல பதவிகளில் இருந்தும் விலகினார் பரஞ்சோதி | Paranjodi Has Announced Resign From All Position

“நான் ஏற்கனவே கோப்பாய் தொகுதி சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கட்சி தலைமை பீடத்திற்கு பல கடிதங்கள் எழுதி பல விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தேன்.

கட்சியிலும் பல சீர் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் நான் பல கோரிக்கைகளை முன்வைத்து கடிதங்கள் அனுப்பி இருந்தேன். அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு உரிய பதில்கள் எனக்கு கட்சி தலைமைப் படத்திலிருந்து அனுப்பப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை.

மத்திய குழுவில் குறித்த விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூத்த துணைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், பொருளாளர் கனகசபாபதி, தலைவர் மாவை சேனாதிபதி ஆகியோர் தலைமையில் கோப்பாய் தொகுதி கிளை செயற்குழுவுடன் கலந்தாலோசிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த மாதம் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய வீட்டில் கோப்பாய் தொகுதி கிளை செயற்குழு கூட்டப்பட்டது. குறித்த குழுவின் ஏகோபித்த முடிவின் படி ஏற்கனவே காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒப்பந்தத்தின்படி ரெலோ கட்சியைச் சேர்ந்த கோப்பாய் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளரை மாற்றுமாறு நாங்கள் கோரியிருந்தோம். ஒப்பந்தத்தின்படி அவர் 2020 ஆம் ஆண்டே மாற்றவேண்டி இருந்தது.

தவிசாளர் மாற்றம்

தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் - சகல பதவிகளில் இருந்தும் விலகினார் பரஞ்சோதி | Paranjodi Has Announced Resign From All Position

குறித்த ஒப்பந்தத்தின் படி தவிசாளரை மாற்றுதல் தொடர்பில் நான் நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதங்கள் அனுப்பி இருந்தேன். அந்தக் கடிதங்களின் அடிப்படையில் கோப்பாய் தொகுதி கிளை செயற்குழுவும் கோப்பாய் பிரதேச சபை தவிசாளரை மாற்றுமாறு கோரியிருந்தது.

இதனைச் செயற்படுத்த தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா தவறிவிட்டார். அதன் அடிப்படையில் கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையான நிலையில் தலைவர் காணப்படுகின்றார். அதனடிப்படையில் தமிழரசுக் கட்சியின் உபகுழுக்கள், மத்திய செயற்குழு, கோப்பாய் தொகுதி கிளை குழுவின் இணைத் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து நான் விலகுவதாக கட்சித் தலைவர் மாவை சேனாராஜாவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி கட்சியின் சகல பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகின்றேன்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026