உணவின்றி மயக்கமடைந்த 20இற்கும் மேற்பட்ட மாணவர்கள்! நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு (நேரலை)
இரண்டாம் இணைப்பு
12.05PM
அனுராதபுரம் மாவட்டத்தின் விளச்சிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 3 பாடசாலைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், உணவு இன்மையினால் நேற்று மயக்கமடைந்து விழுந்துள்ளதாக அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறித்த பிரதேச செயலகத்தின் சித்தார்த்த மகா வித்தியாலயம், கிம்புலாவ காமினி வித்தியாலயம் மற்றும் ஆனந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்களை தொடர்புகொண்டு வினவியதாகவும் குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
9.40AM
நாடாளுமன்ற அமர்வு இன்று (22.09.2022) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை,
- இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துவது தொடர்பான விதப்புரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதனை அடுத்து, பிற்பகல் 4.30 மணி முதல் பிற்பகல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.50 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.