சூழ்ச்சியின் பின்னணியில் சுமந்திரன் : நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய சிறீதரன் எம்பி
தான் தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடல் செய்யவே சென்னை செல்ல இருந்ததாகவும் அதன் காரணமாகவே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக சுமந்திரன் (M. A. Sumanthiran) யாழில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
இன்றைய (21.01.2024) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த சிவஞானம் சிறீதரன் “மேற்குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரித்தால் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகங்களில் வந்தது என்பதை அறிய முடியும்.
இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால் சுமந்திரனை நான் சென்னையில் கண்டபோதும் அவர் என்னிடம் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை.
நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குரிய உண்மையைக் கண்டறிய முடியும். எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக நான் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த அயூக் அஸ்மின் அன்றைய தினம் இந்த விடயம் குறித்து எனக்கு எதிராக ஒரு செய்தியை தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அவரும் சுமந்திரனும் நெருங்கிய நண்பர்களாவார். இதற்குப் பின்னால் சுமந்திரன் வெளியிட்ட செய்திக்கும் அஸ்மின் வெளியிட்ட பதிவுக்கும் இடையில் ஏதோ ஒரு சங்கதி இருக்கின்றது.
எனவே நான் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க கூடாது என்பது அவர்களின் திட்டமாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான கருத்தை கீழ் உள்ள பதிவில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |