இடைக்கால பாதீட்டுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று - நேரலை
2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்றையதினம் (06.12.2024) இடம்பெறவுள்ளது.
கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதியும், குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதியையும் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான 4 மாதத்திற்கான அரச சேவைகளைக் கொண்டு செல்வதற்கு அவசியமான நிதி இந்த கணக்கு வாக்கு பணத்தின் ஊடாக ஒதுக்கப்படும்.
இந்த கணக்கு வாக்கு பணத்தின் ஊடாக அதிக நிதி போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த தொகை 2 இலட்சத்து 20,006 பில்லியன் ரூபாவாகும். மேலும் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 1 இலட்சத்து 86,031 மில்லியன் ரூபாவும், பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 1 இலட்சத்து 70,535 மில்லியன் ரூபாவும், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 1 இலட்சத்து 61,999.9 மில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 1 இலட்சத்து 42,925 மில்லியன் ரூபாவும் கணக்கு வாக்கு பணத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 67,361 மில்லியன் ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |